(ஆர்.விதுஷா)
சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பயணிகளை இனம் காணும் வகையில் ஸ்கேனர் இயந்திரங்களை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை முதல் கட்நாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
ஆகவே, இது தொடர்பில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்
சீனாவின் வுஹன் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மூவர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment