எத்தனோல் இறக்குமதிக்கு இன்றுமுதல் தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

எத்தனோல் இறக்குமதிக்கு இன்றுமுதல் தடை

மதுபான உற்பத்திக்கு அவசியமாகின்ற எத்தனோலை (Ethanol) இறக்குமதி செய்வது தடை செய்யப்படுகின்றது.

இன்று (01) முதல் உடனடியாக அமுலாகும் வகையில் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல் அமைச்சினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் எனும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பெருமளவில் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment