சார்ள்ஸின் இடத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ரானி ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

சார்ள்ஸின் இடத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக பத்ரானி ஜயவர்தன

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் புதிய செயலாளராக பத்ரானி ஜயவர்தன இன்று (01) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள அலுவலரான இவர், திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் (30) காரணமாக உருவான வெற்றிடத்திற்கு, சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக ஜனாதிபதியால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்ரானி ஜயவர்தனவு கடந்த 2008 முதல் 2015 வரை, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளராக பணியாற்றியுள்ளதோடு, 26 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிர்வாக சேவை பதவிகளை வகித்துள்ளார்.

No comments:

Post a Comment