திருகோணமலை, இரக்கண்டி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.
இந்த வெடிபொருட்கள் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
20 வோட்டர் ஜெல் குச்சிகள், 4 பாதுகாப்பு ரவைகள் பின்னப்பற்றிருந்த நூல்கள், 2 மின்னை கடத்தாத டெடனேட்டர்கள் போன்றவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உறுதிபூண்டுள்ள இலங்கை கடற்படையினர் கடற்கரையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை கடற்படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment