பாறுக் ஷிஹான்
மலர்ந்துள்ள புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று (1) நாவிதன்வெளி பிரதேச சபையில் சிறப்பாக இடம் பெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சத்தியப்பிரமாண நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர், உத்தியோகஸ்த்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச சபை முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் தவிசாளர் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment