புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு உதவிய சிறுமி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு உதவிய சிறுமி

பாறுக் ஷிஹான்

நாவிதன்வெளியில் புது வருடத்தில் 30 ஏழை மாணவர்களுக்கு தனது பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு சிறுமி உதவிகளை வழங்கியுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மத்தியமுகாம் சமூர்த்தி வங்கி முகாமையாளராக கடமையாற்றும் ஆர்.வசந்தகுமாரின் மகளின் 3ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பகுதியில் வறிய நிலையில் இருந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை புத்தகப்பை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் பிரதேச செயலகத்தை சுற்றி மரங்கள் சில நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.லதாகரன், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment