இரத்மலானை - யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை நாளை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

இரத்மலானை - யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை நாளை ஆரம்பம்

(எம்.மனோசித்ரா) 

இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான முதலாவது தனியார் விமான சேவை நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. 

நேர அட்டவணையின் அடிப்படையிலான தனியார் விமான சேவைகளை அறிமுகம் செய்யும் முதலாவது நிறுவனமாக பிட்ஸ் எயார் (FitsAir) நிறுவனம் சேவையை ஆரம்பிக்க உள்ளது. 

இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கி, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த விமான சேவை இடம்பெற உள்ளது. 

இதன்படி, திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து காலை 7.30 க்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து 8.20 க்கும் இந்த விமான சேவை இடம்பெற உள்ளது. 

இரண்டு மணி நேர பயணம் கொண்ட குறித்த விமான வழித்தடத்தில் விமானப்படை விமானம் 9 ஆயிரம் ரூபா கட்டணத்தில் முன்னெடுக்கப்படும் நிலையில், பிட்ஸ் எயார் நிறுவன விமானம் 7 ஆயிரத்து 500 ரூபா கட்டணத்தில் தனது சேவையை முன்னெடுக்க உள்ளது. 

அத்துடன், இந்த விமான சேவைக்காக 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 ரக விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இதேவேளை, இந்த நிறுவனம் ஏற்கனவே மட்டக்களப்புக்கு தனது விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment