மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2 மாதங்களில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 380 ரூபாவாக காணப்படுகின்றது. அத்துடன் கறி மிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இருப்பினும் எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் I.J. விஜேநந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment