காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிப்பு! - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2020

காட்டு யானைகளால் விவசாயிகள் பாதிப்பு!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

காட்டு யானைகளின் தொல்லைகளால் தினந்தோறும் கஷ்டப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளே இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் மாலை 5 மணிக்குப் பின்னர் கூட்டமாக வரும் யானைகளால் தினமும் அச்சத்துடன் இருப்பதாகவும், யானைகள் வேளாண்மைகளை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

முடிந்த வகையில் தடுப்பு வேலிகளை அமைத்தாலும் அதனை உடைத்து யானைகள் வேளாண்மைகளை சேதப்படுத்துகின்றன.

எனவே யானைகளின் வருகையினை கட்டுப்படுத்தி அச்சமின்றி நிரந்தரமாக வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் யானை தடுப்பு வேலிகளை அமைத்துத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment