கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிந்ததுடன், உலகளாவிய ரீதியில் இதுவரை 8,000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள் சீனாவுக்கான விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.
1. ஏயார் கனடா - ஏயார் கனடா ஜனவரி 28 சீனாவுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளதாக கூறியது.
2. ஏயார் பிரான் - ஏயார் பிரான் ஜனவரி 31 முதல் பெப்ரவரி மாதம் 9 வரை சீனாவின் பிரதான நகரங்களுக்கான அனைத்து திட்டமிட்ட விமானங்களையும் இரத்து செய்துள்ளது.
3. ஏயார் இந்தியா - ஏயார் இந்தியா தனது மும்பை, டெல்லி - ஷாங்காய்க்கிடையிலான விமான சேவையை ஜனவரி 31 முதல் பெப்ரவரி 10 வரை இரத்து செய்துள்ளது.
4. ஏயார் சியோல் - தென்கொரியாவின் ஏயார் சியோல் ஜனவரி 28 முதல் சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளது.
5. ஏயார் தன்சானியா - ஏயார் தன்சானியா சீனாவுக்கான தனது முதல்தர விமான சேவையை ஒத்திவைப்பதாக கூறியது. பெப்ரவரியில் சீனாவுக்கு விசேட விமான சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளது.
6. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் - அமெரிக்கன் ஏர்லைன்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பீஜிங் மற்றும் ஷாங்காய் செல்லும் விமானங்களை பெப்ரவரி 09 முதல் மார்ச் 27 வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
7. பிரிட்டிஸ் ஏயர்வேஸ் - பிரிட்டிஸ் ஏயர்வேஸ் ஜனவரி 30 முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு சீனாவின் பிரதான நகரங்களுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது.
8. கேத்தே பசுபிக் ஏயர் வேஸ் - ஹொங்கொங்கின் கேத்தே பசுபிக் ஏயர் வேஸ் ஜனவரி 30 முதல் மார்ச் இறுதி வரை சீனாவின் பிரதான நகரங்களுக்கான தனது விமான சேவையை 50 சதவீதத்துக்கும் அதிகம் குறைத்துள்ளது.
9. எகிப் ஏயார் - எகிப் ஏயார் பெப்ரவரி 01 முதல் சீனாவுக்கு புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக ஜனவரி 30 அறிவித்தது.
10. பின் ஏயார் - பின்லாந்தின் பின் ஏயார் மார்ச் 28 வரை சீனாவின் நாஞ்சிங் மற்றும் பீஜிங்கிற்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக ஜனவரி 28 தெரிவித்தது. அதன்படி பெப்ரவரி 5 முதல் மார்ச் 29 வரை ஹெல்சின்கி மற்றும் பீஜிங்கின் டாக்ஸிங்கிற்கு இடையிலான மூன்று வாராந்திர விமானங்களையும், பெப்ரவரி 8 முதல் மார்ச் 29 வரை ஹெல்சின்கி மற்றும் நாஞ்சிங்கிற்கு இடையிலான இரண்டு வாராந்திர விமானங்களையும் பின் ஏயார் நிறுத்தி வைக்கும்.
11. லயன் ஏயார் - இந்தோனேஷியாவின் லயன் ஏயார் குழுமம் ஜனவரி 29 முதல் பெப்ரவரி மாதம் இறுதி வரை சீனாவுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தோனேசிய நகரங்களில் இருந்து சீனாவுக்கான ஆறு விமானங்களை இதுவரை விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது, மீதமுள்ள விமானங்களை அடுத்த மாதம் நிறுத்தி வைக்கும்.
12. லுஃப்தான்சா - ஜேர்மனின் லுஃப்தான்சா, ஜனவரி 29 லுஃப்தான்சா, சுவிஸ் மற்றும் ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் விமானங்களை பெப்ரவரி மாதம் 09 வரை சீனாவுக்கு அனுப்பாது நிறுத்தி வைத்துள்ளது.
13. எஸ்.ஏ.எஸ் - இசுகாண்டினேவியவின் விமான சேவையான எஸ்.ஏ.எஸ் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ஷாங்காய் மற்றும் பீஜிங்கிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளது. எனினும் ஷாங்காய் மற்றும் பீஜிங்கிலிருந்து 12 வழக்கமான வாராந்திர இணைப்புகளை எஸ்.ஏ.எஸ்.வழங்குகிறது.
14. துருக்கிஸ் ஏயர்லைன்ஸ் - துருக்கியின் துருக்கிஸ் ஏயர்லைன்ஸ் ஜனவரி 30 அன்று பீஜிங், குவாங்சோ, ஷாங்காய் மற்றும் சியான் ஆகிய நகரங்களுக்கு பெப்ரவரி 5 முதல் பெப்ரவரி 29 வரை திட்டமிடப்பட்ட விமானங்களின் சேவையை குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது.
15. யுனிடெட் - சிக்காகோவை தளமாக கொண்ட யுனிடெட் விமான சேவை பெப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை பீஜிங், ஹொங்கொங் மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களுக்கு 24 யு.எஸ் விமானங்களை நிறுத்தி வைப்பதாகக் கூறியது.
No comments:
Post a Comment