ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2020

ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி - 3ம் வாட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இவ்வருடத்திற்கான பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (19) ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளரும் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் ஆசிரியர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்திற்கான புதிய நிர்வாத்தினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். 

தலைவர் ஏ.எல்.நவாஸ் ஆசிரியர், பிரதித் தலைவர் ஏ.எம்.ஏ.றஹீம், உப தலைவர் எம்.எம்.புஹாரி, செயலாளர் ஏ.ஜே.சனூன், பொருளாளர் ஏ.எல்.ஜௌபர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக யூ.எல்.அஹமட், எம்.ஐ.ஹிப்ஸாத், எஸ்.எல்.மாஹீர், ஐ.பதுர்தீன், எச்.எம்.ஹாலிதீன், ஏ.எம்.ஏ.சித்தீக், என்.எம்.ஜௌபர், எம்.எஸ்.எம்.றிஜாப், ஏ.எல்.எம்.சனூஸ், ஏ.யூ.எம்.சுபைர், எம்.சரீப் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment