இலங்கை, பங்காளதேஷ் அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை - பார்த்தாலே கண்ணீர் வருவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2020

இலங்கை, பங்காளதேஷ் அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை - பார்த்தாலே கண்ணீர் வருவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

இலங்கை, பங்காளதேஷ் அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இந்த முகாம்களை பார்க்கும் போது கண்ணீரை வரவழைக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் குறித்து சென்னை திநகரில் நடந்த கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்ல முடியாது

அவ்வாறு அமுல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமை கொடுக்கும் சட்டம். அச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. 

குடியுரிமை சட்டம் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதனால் யாருக்கும் பிரச்சினை இல்லை. குடியுரிமை சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசி யாரையும் கொந்தளிப்புக்குள்ளாக்க வேண்டாம்.

யாருடைய குடியுரிமை பறி போகும் என கருதுகிறார்களோ அவர்களிடம் தெளிவாக விளக்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் குடியுரிமை சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இலங்கை, பங்காளதேஷ் அகதிகளுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

அந்த முகாம்களுக்கு சென்று பார்த்தால் கண்ணீர் வருகிறது. அஸ்ஸாமில் அமுல்படுத்தப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படாது. அது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கிறது என நிர்மலா தெரிவித்தார்.

No comments:

Post a Comment