இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு !

இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களான நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம் மற்றும் ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டம் ஆகியவற்றுக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டங்களான, நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் சகல பட்டப்படிப்பு கற்கை நெறிகளும் (மருத்துவம்/துணை மருத்துவம் & ஆடை வடிவமைப்பு கற்கைநெறி தவிர்ந்தவை) பொறியியல், விஞ்ஞானம், வியாபாரம், பொருளாதாரம், வர்த்தகம், மானுடவியல் மற்றும் கலை மற்றும் ராஜிவ் காந்தி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் B.E அல்லது B.Tech பட்டங்களுக்கு வழிசமைக்கும் ‘தகவல் தொழில்நுட்பத் துறைகளிலான பட்டப்படிப்புக் கற்கைநெறிகள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 06 ஆம் திகதி, ஜனவரி 2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்ட இறுதித் திகதியான 2019 டிசம்பர் 16 ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இறுதி திகதிக்குள் விண்ணப்பிக்க முடியும். 

மேலதிக தகவல்கள் உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் www.mohe.gov.lk இணையத்தள முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கற்கை நெறிகளுக்காக விண்ணப்பப் படிவங்களை உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சில் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2020 ஜனவரி 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

இந்த கற்கை நெறிகளுக்கான தகைமை மற்றும் தெரிவு செய்தல் நடைமுறை தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் உயர் கல்வி, தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு அல்லது இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு ஆகியவற்றை அணுக முடியும்.

No comments:

Post a Comment