15 ஆம் திகதி வரை பஸ் சாரதிகளுக்கு காலக்கெடு வழங்கினார் அமைச்சர் அமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

15 ஆம் திகதி வரை பஸ் சாரதிகளுக்கு காலக்கெடு வழங்கினார் அமைச்சர் அமரவீர

ஜனவரி 15 ஆம் திகதி முதல் பஸ்களில் பயணிகளை அசெளகரியத்துக்குட்படுத்தும் வகையில் இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளி பரப்பப்படுவதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அனைத்து பஸ் சாரதிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயிரம் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பாடல் இறுவட்டுக்களை அனைத்து சாரதிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

15 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த பாடல்களை தவிர பயணிகளை அசெளரியத்துக்குட்படுத்தும் பாடல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவானால் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை பயணிகள் 1955 என்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும்.

No comments:

Post a Comment