கொரோனா வைரஸ் பரவும் வேகம் வலுவடைந்து வருவதாகவும், இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் 56 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சீனாவின் தேசிய சுகாதார ஆணையக அமைச்சர் 'Ma Xiaowei' மேற்கண்டவாறு கூறினார்.
கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளின் அறிவு குறைவாகவே உள்ளது, மேலும் வைரஸால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெளிவாக தெரியவில்லை. இதுவரை சீனாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து மற்றும் பயணத் தடைகள் மற்றும் விசேட நிகழ்வுகளை இரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் கொரோனா வைரஸ் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவளை சீனவின் சந்தைகள், உணவகங்கள் மற்றும் இணைய தளங்களூடாக வனவிலங்குகளை விற்பனை செய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் தடை விதிப்பதாக இன்றைய தினம் சீனா அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment