கடந்த 31.12.2019ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை அசன்பாவா வீதியிலுள்ள வீட்டின் கூரையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கிய திருடன் வீட்டிலுள்ளவர்களை கத்தியைக்காட்டி மிரட்டி நகைகள், பணம் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளார்.
திருடன் முகமூடி, கையுறை அணிந்து குறிப்பிட்ட திருட்டை மேற்கொண்டுள்ளான்.
பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸில் நேற்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
வீடுகளில் இரவு நேரங்களில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
அதேநேரம் இப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் திருட்டை கட்டுப்படுத்த பாதுகாப்புத்தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
SIM.நிப்றாஸ்
No comments:
Post a Comment