பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சிப் பிரதம கொரடாவாக காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுன்றக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐ. தே. மு. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கயந்த கருணாதிலக்கவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவித்த போது அதனை அனைத்துத் தரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் எதிர்க்கட்சியின் நடவடிக்கைக் குழுவுக்கு ரஞ்சித் அலுவிஹார, கே.சி. அலவத்துவல, அஜித்பி. பெரேரா, சிட்னி ஜயரட்ன, ஹெக்டர் அப்புஹாமி, ஆசூ மாரசிங்க ஆகியோரின் பெயர்களையும் சஜித் பிரேமதாச சமர்ப்பித்த போது அதனையும் சகலரும் ஏற்றுக்கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் முதற்தடவையாக இன்று சந்தித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய எதிரணி பாராளுமன்றக் குழுக் கூட்டம் முரண்பாடுகள் எதுவுமின்றி கலகலப்பாகவும், உத்வேகமாகவும் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment