சபை முதல்வராக தினேஷ் குணவர்தன, ஆளுங்கட்சி கொறடாவாக ஜோன்ஸ்டன் பெனாண்டோ - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

சபை முதல்வராக தினேஷ் குணவர்தன, ஆளுங்கட்சி கொறடாவாக ஜோன்ஸ்டன் பெனாண்டோ

வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபை முதல்வராகவும், ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசாங்க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் குறித்த பதவிகளில் அவ்விருவரையும் நியமிப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை 08ஆவது பாராளுமன்றத்தின் 04ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பாராளுமன்ற கன்னி உரையை நிகழ்த்தவுள்ளார்.

நாளைய அமர்வில் சுமார் 600 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வரவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு தூதர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment