வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் தொண்டர் ஆசிரியர்கள்

நிரந்தர ஆசிரியர் நியமனம் கோரி வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத 300 க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த அரசின் ஆட்சியின் போது வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தமக்கு நியமனத்தை பெற்றுத் தருமாறு கோரி இந்தப் போராட்டத்தை தொண்டர் ஆசிரியர்கள் முன்னெடுத்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் கொழும்பு சென்றுள்ளதால் அவருக்கான மகஜரினை ஆளுநரின் ஊடகச் செயலாளர் எஸ்.முகுந்தனிடம் கையளித்துள்ளனர்.

No comments:

Post a Comment