நாங்கள் அனைவரும் நன்றி மறக்காதவர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி மகளிர் அணியின் பொங்கல் விழா நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுமையில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நன்றியை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் இதனைக் கொண்டாடுகின்றோம். பொங்கலாகட்டும் தீபாவளியாகட்டும் இவை இரண்டும் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதைக் குறிக்கின்றது.
தீபாவளியன்று தீபமேற்றி வெளிச்சத்தை உருவாக்குகின்றோம். பொங்கல் அன்று சூரியனை வணங்குகின்றோம். சூரியனுக்கு நன்றி கூறி இதனைச் செய்கின்றோம். மாட்டுப் பொங்கல் செய்கின்றோம் அனைத்து ஜீவராசிகளுக்காக வேண்டி இவற்றை செய்கின்றோம் இவ்வாறான பொங்கலானது நன்றி பாராட்டுவதற்காகவே இதனைச் செய்கின்றோம்.
திருவள்ளுவரும் திருக்குறளில் நன்றியைப் பற்றி கூறியுள்ளார். மகா பாரதம் சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பெண்களுகு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது நாங்களும் பெண்களை சமமாக மதிக்க வேண்டும் இன்றைய நாளில் இலங்கை தமிழரசுக் கட்சி மகளிர் அணி பொங்கல் விழாவை கொண்டாடுகின்றது இது பாராட்டப்பட வேண்டும் இன்றைய நாளைப்போன்று அனைவரும் நன்றி மறக்காதவர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment