வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (02.01.2020) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவி உயர்வு ஏனைய மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள போதும் இ.போ.ச வவுனியா சாலையில் தற்போதைய அரசாங்கத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பஸ்களை கொள்வனவு செய்த போதும் உள்ளூர் சேவைகளை ஈடுபடுத்த முடியவில்லை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறத்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை இ.போ.ச ஊழியர்கள் சிலர் கடமைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்ததால் ஊழியர்களுக்கிடையில் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.
No comments:
Post a Comment