மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி. நவாஸ் பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக ஏ.எச்.எம்.டி. நவாஸ் பதவிப்பிரமாணம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக செயற்பட்டு வந்த யசந்த கோதாகொட, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதி கோட்டாபயர ராஜபக்ஷ் அரசியலமைப்பு சபைக்கு வழங்கியிருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியான பிரசன்ன ஜயவர்தனவின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யசந்த கோதாகொட பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

யசந்த கோதாகொட, கடந்த வருடம் மார்ச் மாதம் முன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment