ARM ஜிப்ரி சேர் காலாமாகிவிட்டதாக எனது மாணவன் ஒருவர் மூலமாக அறிந்துகொண்டேன். தாங்க முடியவில்லை, அன்மையில் தொலைபேசியில் கதைத்த போது சொன்னார், ராஷிட் சத்திர சிகிச்சையொன்றுக்காக மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெறவுள்ளேன் என்றதும் ... ஒகே சேர், நிச்சியமாக இறைவன் துணை நிற்பான் என பிரார்த்தனை செய்தேன்.
அன்மையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு இருந்த அவரது புகைப்படத்தை கண்டு மிக்க கவலை அடைந்தேன்.
இறைவனின் நியதியை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் மரணித்தாக வேண்டும் என்ற இறை வசனத்தை நினைத்து பார்க்க வேண்டியாயிற்று.
2016 ஆம் ஆண்டு நான் ஜே.எம் மீடியா ஊடக கல்லூரியை ஆரம்பிப்பது தொடர்பில் கதைத்த போது மிக்க சந்தோசமடைந்தவர்களில் ARM ஜிப்ரி ஆசிரியரும் ஒருவர். மட்டுமல்ல குறித்த கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்விலும் வளவாளராக கலந்து கொண்டார். பின்னர் தொடர்ச்சியாக ஜே.எம் மீடியா கல்லூரியில் விரிவுரையாற்றி வந்தார்.
வயது வித்தியாசமின்றி யாருடனும் சகஜாமாக மனம் விட்டு பழகக்கூடய ஒருவர். நிறைய விடயங்களை கற்று தந்தவர். பொதுவாக தற்போது ஊடகத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அனைவருமே ARM ஜிப்ரி சேரின் மாணவனாக அல்லது நண்பனாக இருக்க வேண்டும்.
வழமையாக காலை வேளையில் தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சி நிறைவடைந்ததன் பின்னர் நிறைய விடயங்களை என்னோடு கதைப்பார். எப்போது கதைத்தாலும் மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக கதைக்கக் கூடியவர். மிக நிதானமாக பண்பாட்டுடன் நடக்கக்கூடிய ஒருவர்.
ARM ஜிப்ரி சேரின் இழப்பு தமிழ் பேசும் மக்களின் இழப்பாகும். எனவே அவர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை வழங்குவதுடன், அவர்களுக்கு இறைவன் மேலான சுவனத்தை வழங்கவும் பிறார்த்திக்கின்றோம்.
எல்லாம் வல்ல இறைவன் உங்கள் பாவங்களை மன்னித்து உயர்தரமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் நுழையச் செய்வானாக.
ராஷித் மல்ஹார்டீன்
TV News Reader, Journalist





No comments:
Post a Comment