முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் - 47 பாடசாலைகள் ஜனவரி 6 இல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் - 47 பாடசாலைகள் ஜனவரி 6 இல் ஆரம்பம்

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (02) ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

எனினும், மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்ப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமானதுடன் எதிர்வரும் 4ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

No comments:

Post a Comment