வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு - ஒருவர் கைது, ஏனையோர் தப்பியோட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 19, 2020

வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு - ஒருவர் கைது, ஏனையோர் தப்பியோட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தாளையடிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற யாழ். மற்றும் பருத்தித்துறை சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை நேற்றைய தினம் சுற்றிவளைத்துள்ளனர். 

இதன் போது 18 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்ட அதே நேரத்தில் குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்தனர். 

மேலும் பதுக்கி வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட 18 கிலோ கஞ்சாவையும் இன்று திங்கட் கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment