ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - ஜே.வி.பி சாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகிலுள்ள அரச நிலத்தை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் - ஜே.வி.பி சாடல்

(ஆர்.யசி)

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச நிலத்தை 43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாவும் எந்தவித விலைமனுக்கோரலும் இல்லாது அமைச்சரவையில் தனிப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்துகின்றது. 

மத்தள விமான நிலையத்தையும் சர்வதேச நிறுவனமொன்றுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானம் எடுக்கின்றதாகவும் ஜே.வி.பி கூறுகின்றது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் கூறினார்.

No comments:

Post a Comment