2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அனைத்து அரசாங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கும் சுற்றுநிரூபம் மூலம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அறிவித்துள்ளார்.
இதற்கமைய முதலாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம் 24ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தும் பணி, எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விடைத்தாள் திருத்தும் பணிக்காக 30,000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment