கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (04) பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கமைய கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக அநுராதா யஹம்பத் மற்றும் வடமத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அநுராதா யஹம்பத், தேசிய தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவராகவும், பிரபல ஆடைத் தொழிற்சாலையொன்றின் பணிப்பாளராகவும் பணி புரிகின்றார்.
பேராசிரியிர் திஸ்ஸ விதாரண, முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமாவார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நீண்ட நாள் பணியாற்றிய அவர், வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணருமாவார்.
No comments:
Post a Comment