அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பினார் வைத்தியர் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் விபத்து - தெய்வாதீனமாக உயிர் தப்பினார் வைத்தியர்

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஐந்தாம் கட்டையில் வைத்தியர் ஒருவர் ஓட்டிவந்த கார் இன்று (05) விபத்துக்குள்ளாகி குடை சாய்ந்துள்ளது. 

அம்பாறை வைத்தியசாலையிலிருந்து கடமையை முடித்துக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த காரை ஓட்டி வந்த வைத்தியர் சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை புதன்கிழமை (4) மாலை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - ஜீப்வண்டி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த இளைஞா் ஒருவா் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரீ.கே. ரஹ்மத்துல்லா

No comments:

Post a Comment