மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதிப் பத்திரம் பரீட்சார்த்தமாக ஒரு வார காலத்திற்கு இரத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதிப் பத்திரம் பரீட்சார்த்தமாக ஒரு வார காலத்திற்கு இரத்து

மணல் மற்றும் மண் உள்ளிட்டவற்றை வாகனங்களில் ஏற்றி செல்வது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வது ஒரு வார காலத்திற்கு பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்படும் என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர் கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மணல் மற்றும் மண் முதலானவற்றை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் நேற்று (04) முதல் இரத்து செய்வதற்கு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறை இரத்து செய்யப்படுவதன் மூலம் சந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த விடயங்களை கண்டறிவதற்கு குழு ஒன்று தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் இவற்றை எடுத்து செல்வதற்கான அனுமதிப் பத்திர தேவையின் மூலம் மண், மணல் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்தமை பொதுமக்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் இந்த குழு ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படுவதன் மூலம் மண், மணல் ஆகியவற்றின் விலைகளின் வீழ்ச்சி நிர்மாண நடவடிக்கைகளை துரிதப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதற்கு அமைவாக உத்தேச நோக்கத்தை மேலும் உறுதி செய்வதற்கு முடியுமாயின் பரீட்சார்த்த காலப்பகுதிக்கு முன்னர் அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வது குறித்து அமைச்சரவை கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

மணல், மரம், அல்லது மண்ணை எடுத்து செல்வதற்கு மாத்திரம் விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறை இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அகழ்வுக்காக விதிக்கப்பட்டிருந்த சட்ட விதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார். 

இதற்கு அமைவாக சுற்றாடல் பிரச்சனை அல்லது வேறு எந்த பிரச்சனையும் எற்படுவதற்கு இடம் இல்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment