சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியரான கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெளி விவகாரங்களுக்கான சுவிஸ் பெடரல் திணைக்களம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்வீற்றர் தளத்திலேயே இவ்வாறு வரவேற்பு தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணி புரியும் இலங்கையை சேர்ந்த குறித்த ஊழியர் நேற்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தலா 500,000 ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
அவர் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஒன்றுக்கொன்று முரணான வகையில் தகவல் வழங்கியமை தொடர்பாக டிசம்பர் 16ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment