எதிர்வரும் வருடம் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் எண்ணிக்கையை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்வரும் வருடத்தில் 100 பல்கலைக்கழக கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏனைய நோக்கங்கள் மற்றும் தேசிய நோக்கங்களுக்கு மாற்றமாக, முறையற்ற வகையில் அரச சொத்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தினால் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment