ஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

ஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு

(செ.தேன்மொழி)
கறுப்பு நிற ஆடையில் சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதியில்லை என்று சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேச சபையின் 21 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது கூட்டத்தெடரில் கலந்துகொள்ளாமல் வெளியேறியுள்ள குறித்த உறுப்பினர் புத்தளத்திலுள்ள சர்வ மத குழுவின் தலைவர் சுந்தரம் குருக்களிடம் முறைபாடொன்றையும் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் கூறுகையில், 14 வருடங்களாக ஐயப்ப தரிசனம் மேற்கொண்டு வருகின்றேன், கடந்த வருடமும் ஐயப்பன் தரிசனத்தை மேற்கொள்ள மாலை அணிந்திருந்தேன். அப்போதெல்லாம் நான் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தே பிரதேச சபை அமர்வுகளில் கலந்துகொண்டேன். ஆனால் அப்போது எனக்கு எவ்வித எதிர்புகளும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னரான முதல் அமர்வே நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது நான் கறுப்பு நிற ஆடையில் வந்திருப்பதினால் எனக்கு அனுமதியில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய தெரிவித்தார். 

பின்னர் நான் அமர்வில் கலந்துகொள்ளாது அங்கிருந்து வந்து விட்டேன். இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் சர்வஜன மத குழுவின் புத்தளம் பகுதி தலைவரிடமும் முறைப்பாடளித்துள்ளேன். எதிர்வரும் திங்கட்கிழமை குருணாகல் பிரதேசத்தின் தேர்தல் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளளேன்.

No comments:

Post a Comment