இராஜாங்க அமைச்சுகளுக்கு செயலாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (04) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்பின் 44 (1) கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கான, இராஜாங்க அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதற்கமைய, தற்போது நியமிக்கப்பட்டுள்ள 38 இராஜாங்க அமைச்சர்களுக்கும் புதிய செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இடைக்கால அரசில், பிரதமர் மற்றும் 15 அமைச்சரவை அமைச்சர்கள், 38 இராஜாங்க அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர்.
No comments:
Post a Comment