எதிர்காலத்தில் நாங்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம் - தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2019

எதிர்காலத்தில் நாங்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம் - தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
இன்று நாங்கள் இருக்கின்ற காலகட்டம் மிகவும் நெருக்கடியானவொரு காலகட்டம், எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற ஒரு காலகட்டம் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பதுரியா நகர் அஸ் – ஸபா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மீராவோடையில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாங்கள் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதனூடாக நாங்கள் அபிவிருத்தி வேலைகளையும், கல்வி விடயங்களையும், மக்களுடைய அபிலாஷைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். 

எனவே இவ்வாறான விடயங்களை நாம் பெற்றுக்கொள்ள எங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு உறுப்புரிமையை நாங்கள் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் நாம் எல்லோரும் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம்.

இந்தப் பிரதேசத்தில் ஒட்டுமொத்தமாக பாடசாலை விடயங்கள், கட்டிட விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் எங்களுடைய அரசியல் தலைமை அமீர் அலி அவர்களிடம் சென்று அத்தனைகளையும் பெற்றுத் தாருங்கள் என்று நாம் கேட்கும் போது நாம் ஏன் இந்தப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட அரசியல் பேச முடியாது என்ற கேள்வியினையும் நான் கேட்க விரும்புகின்றேன்.

எனவே நீங்கள் அனைவரும் நியாயமாக சிந்தித்துக் கொள்ளுங்கள் எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த பிரதிநிதித்துவத்தை நாங்கள் பாதுகாக்கவில்லை என்று சொன்னால் பாதிக்கப்படுவது நாங்களும் எங்களுடைய குழந்தைகளும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment