மண்சரிவு இடம்பெறக்கூடிய இடங்களை கண்காணிக்கும் கருவிகளை அமெரிக்கா, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இக்கருவிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு பொறியியலாளர்கள் மற்றும் புவியியலாளர்கள் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிக்குற்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த உபகரணங்களின் உதவியுடன் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை இலகுவாக அடையாளம் காணமுடிவதுடன் சொத்துக்கள் மற்றும் உயிர்ச்சேதங்களையும் தடுக்க முடிந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ், சிறப்பான தயார்படுத்தல் உயிர்களை பாதுகாக்கும். இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் மண்சரிவு ஏற்படக்கூடிய பிராந்தியங்களை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை வெளியிட முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment