தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2019

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கல்வி அறக்கட்டளையானது தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது. 

க.பொ.த. உயர்தர இளங்கலைப்பட்டத்துக்கான கற்கை நெறிகள், மற்றும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழிற்பயிற்சி/ தொழில்நுட்ப கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 

க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையில் குறைந்த பட்சம் 6 திறமைச்சித்தி (Credit) களைப் பெறும் 25 வயதுக்கு குறைந்த மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். 

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர் தர பெறுபேற்று சான்றிதழ்கள், பெற்றோரின் சம்பள உறுதி மற்றும் தொழில் தொடர்பான தோட்டத் துரையின் சான்றிதழ் ஆகியவற்றின் போட்டோப் பிரதிகளுடன் Hon. Secretary CEWET C/O High Commission of India, P. O. Box 882 Colombo- 3 என்ற முகவரிக்கு எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பப்பட வேண்டும். 

அதேநேரம் விண்ணப்பப்படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளமான www.hcicolombo.gov.in இல் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். 

அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 03 மற்றும் உதவி இந்திய உயர் ஸ்தானிகராலயம் 31, ரஜபிஹில்ல மாவத்தை, கண்டி ஆகிய இந்திய உயர் ஸ்தானிகராலய அலுவலகங்களில் இருந்தும் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment