தோப்பூரில் ஒரு மாதத்தில் 27 டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2019

தோப்பூரில் ஒரு மாதத்தில் 27 டெங்கு நோயாளர்கள்

திருகோணமலை, மூதூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் ஒரு மாதத்திற்குள் மாத்திரம் 27 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மூதூர் சுகாதார வைத்தியதிகாரி யாக்கூப் ஜெஸ்மின் தெரிவித்தார்.

தோப்பூர் பிரதேசத்தில் அல்லைநகர் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் 19 டெங்கு நோயாளர்களும், அல்லைநகர் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் 8 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் தோப்பூர் பிரதேசத்திலேயே இப்பருவகாலத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் தோப்பூரில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

(அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment