முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி நடைபெறும் - கல்வியமைச்சு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

முதலாம் தர மாணவர் அனுமதி தேசிய வைபவம் 16 ஆம் திகதி நடைபெறும் - கல்வியமைச்சு

நாடளாவிய ரீதியில் உள்ள அரச உதவி பெறும், தனியார் பாடசாலைகளின் 2020 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் தேசிய வைபவமும் வகுப்புகளை ஆரம்பித்தல் தொடர்பான நிகழ்வு 2020 ஜனவரி 16 ஆம் திகதி நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

புதிய மாணவர்களை அனுமதிக்கும் சமயத்தில் இரண்டாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு முதலாம் தர மாணவர்களை வரவேற்குமாறும் மாணவர்களது அனுமதி இடம்பெறும் ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர் புதிய முதலாம் தர மாணவர்களை அறிமுகமாக்கும் நிகழ்வுகளை நடத்தி முடிக்குமாறும் கல்வியமைச்சு அதிபர்களைக் கேட்டுள்ளது. 

சாய்ந்தமருது நிருபர்

No comments:

Post a Comment