பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடாத்தி சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பையா சதாசிவம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
நேற்று முன்தினம் (03) செவ்வாய்க்கிழமை அமைச்சு செயலகத்தில் பிரதமரை நேரில் சந்தித்து இதனை கையளித்தார்.
தலவாக்கலை நிருபர்
No comments:
Post a Comment