தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திசை மாறிச் சென்றாலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்கே பேராதரவு வழங்குவார்கள்.”
இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நாம் பல தடவைகள் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அவர்கள் பேச்சுக்கு வரவில்லை.
இந்த நிலையில், எனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தரம் குறைத்தும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் புகழ்ந்தும் கூட்டமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திசை மாறிச் சென்றாலும் தென்னிலங்கையிலுள்ள மக்களைப் போல் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களும் எனக்கே பேராதரவு வழங்குவார்கள்” – என்றார்.
No comments:
Post a Comment