கோட்டாபய, நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர் - கெஹெலிய எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

கோட்டாபய, நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர் - கெஹெலிய எம்.பி.

நாட்டை சிறந்த முறையில் கட்டியெடுப்புவது குறித்தே கோட்டாபய ராஜபக்ஷ அதிகம் சிந்திக்கிறாரென நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “அண்மையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஒரு மோதல் ஏற்பட்டது, இதன் விளைவாக குடிமக்கள் அநாதைகளாக மாறினர்.

அதாவது, இந்த அரசாங்கம் நாட்டையும் மக்களையும் கவனத்திற்கொள்ளாமலேயே அதிக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

ஆனால், எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய, நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகவும் அக்கறை கொண்டவர்.

மேலும் நாட்டைப் பற்றியே அதிகம் சிந்திப்பவர். அத்துடன் ஏனைய வேட்பாளர்களுக்கு அவதூறு செய்யாமல், தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment