மீலாந் நபி தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடாத்தும் கட்டுரைப் போட்டிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2019

மீலாந் நபி தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடாத்தும் கட்டுரைப் போட்டிகள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு பிரிவாக கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.

பிரிவு 01 - ஆய்வுக் கட்டுரை - தலைப்பாக ‘பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்’ எனும் தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டுரைச் சொற்கள் 4500 – 5000 க்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும், மொழி - தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கலாம், பி.ஏ (B.A), எம்.ஏ (M.A) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் (College of Education) பயின்றவர்கள் இப்பிரிவில் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவு செய்யப்படும் முதலாமிடத்துக்கு 100,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 75,000 ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 50,000 ரூபாவும், பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பகுதி - 02 இன் - கட்டுரைத் தலைப்புகளாக, 01 - நபி முஹம்மத் ஸல்) அவர்களின் பன்முக ஆளுமை, 02 - நற்குண சீலர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், 03 - மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆகிய 03 தலைப்புகளில் ஏதாவது ஒன்றை எழுதலாம், சொற்கள் 1500 - 2000 க்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும், மொழி: தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் எழுதலாம், உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள் இப்பிரிவில் விண்ணப்பிக்க முடியும்.

இப்பிரிவில் தெரிவு செய்யப்படும் முதலாமிடத்துக்கு 75,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 50,000 ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 30,000 ரூபாவும், பங்குபற்றுபவர்களில் 20 நபர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

போட்டியின் பொது நிபந்தனைகளாக, கட்டுரை சுய ஆக்கமாக இருக்க வேண்டும், இதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது, உசார்த்துணைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத விருப்பமுள்ள அனைவரும் பங்குபற்றலாம், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் சேர்த்து இணைக்கப்பட வேண்டும், கட்டுரை எழுத விரும்புவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஜம்இய்யாவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும், கட்டுரைகள் யாவும் 31.01.2020 திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும், கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘கட்டுரைப் போட்டி - 2019’ எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆண்கள், பெண்கள் என இருசாராரும் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

மேலதிக விபரங்களுக்கு, வார நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 011-7490490 / 077-3185353 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி போட்டியாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

அனுப்ப வேண்டிய முகவரி: 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, 281, ஜயந்த வீரசேகர மாவத்த, கொழும்பு - 10

No comments:

Post a Comment