வாழைச்சேனை ஆயிஷாவில் வாய் நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 28, 2019

வாழைச்சேனை ஆயிஷாவில் வாய் நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாய் சுத்தம் மற்றும் பற் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலாயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை பற் சுகாதார அதிகாரி சம்சுதீன் பாத்திமா சபாயா கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல் சுத்தம் செய்யும் முறைகள் பற்றியும், முறையற்ற விதத்தில் பற்களை பராமரித்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

பாடசாலையின் சுகாதாரக் கழக பிரிவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.நௌசாத், பாடசாலையின் டெங்கு மற்றும் சுகாதாரப் பிரிவு பொறுப்பாசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத், ஆர்.எம்.இர்பாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment