உயிராபத்துகளுக்கு மத்தியில் மின்சார விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

உயிராபத்துகளுக்கு மத்தியில் மின்சார விநியோகம்

பொகவந்தலாவை லொயிர்னோன் தோட்டத்தில் மின் தூண் முறிந்து வீழ்ந்தமையால் உயர் மின் அழுத்த வயர்கள் அறுந்து தேயிலை செடிகளுக்கு மேல் வீழ்ந்து உள்ளன.

லொயினோன் நோர்த்கோ தோட்டத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் இந்த மின் வயர்கள் கடந்த மூன்று மாதங்களாக தேயிலை செடிகளின் மீது வீழ்ந்து கிடக்கின்றன.

கடும் மழையின் போது இந்த மின் தூண் முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த வயர்கள் ஊடாக தொடந்தும் மின் விநியோகம் வழங்கப்பட்டுவருவதால் ஆபத்துக்கு மத்தியில் தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். 

தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் இந்த பாதை வழியாக பயணிப்போர் உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

முறிந்து வீழ்ந்த மின்கம்பத்துக்கு பதிலாக மின்சார சபை புதிய கொங்றீட் தூண் நாட்டிய போதும் மின் வயர்கள் பொருத்தப்படாது தொடர்ந்தும் தேயிலை செடியின் மீது ஆபத்தான நிலையிலேயே காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இன்னும் சில மின்கம்பங்களும் சரிந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. இவை சரிந்து வீழுமாயின் 200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள். 

தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் தாமும் தமது பிள்ளைகளும் இந்த உயர் மின் வயர்கள் மத்தியில் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(கொட்டகலை நிருபர்)

No comments:

Post a Comment