வட கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாடசாலை செல்லும் வழியில் வீதியோர குண்டு ஒன்றில் சிக்கி ஒன்பது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏழு முதல் 10 வயதுடைய எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய இந்த சிறுவர்கள் திட்டமிட்டு புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த செப்டெம்பர் வரையான மூன்று மாதங்களுக்குள் 1,174 ஆப்கான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் காலப் பிரிவில் 3000 இக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
டகார் மாகாணத்தை தலிபான்கள் பல வாரங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் இராணுவம் அண்மையிலேயே அந்த பகுதியை மீட்டனர். இந்த கண்ணி வெடியை தலிபான்கள் புதைத்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஒரு பகுதியில் இருந்து வாபஸ் பெறும்போது பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து அங்கு கண்ணி வெடிகளை புதைத்துச் செல்வது வழக்கமாகும்.
தெற்கு மாகாணமான காசியில் கடந்த மே மாதம் கண்ணிவெடியால் ஏழு சிறுவர்கள் கொல்லப்பட்டு மேலும் இருவர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment