புதிய இந்திய வரைபடம் வெளியீடு : எல்லை மீறும் சீனாவுக்கு பதில் : பாகிஸ்தான் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 3, 2019

புதிய இந்திய வரைபடம் வெளியீடு : எல்லை மீறும் சீனாவுக்கு பதில் : பாகிஸ்தான் எதிர்ப்பு

புதிய இந்திய வரைபடத்தில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்.

ஜம்மு காஷ்மீரில் 22 மாவட்டங்களும் லடாக்கில் 2 மாவட்டங்களும் உள்ளன.

ஜம்மு காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களைக் காட்டும் புதிய இந்திய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கம் புதிய வரைபடத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் காட்டப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பகுதிகளும், புதிய வரைபடத்தில் அடங்குகின்றன.

1947ஆம் ஆண்டு மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் 14 மாவட்டங்கள் (கதுவா, ஜம்மு, உதம்பூா், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிர்பூர், முசாபராபாத், லே, லடாக், கில்ஜித், கில்ஜித் வஸாரத், சில்ஹஸ்) இருந்தன.
இந்த ஆண்டு மேலும் 14 மாவட்டங்கள் (குப்வாரா, பந்திபூா், கந்தா்பால், ஸ்ரீநகா், பட்காம், புல்வாமா, குல்காம், சோபியான், ரஜெளரி, ராம்பன், கிஷ்த்வார், சம்பா, கார்கில்) உருவாகின. மொத்தம் 28 மாவட்டங்கள் ஆனது.

புதிய வரைபடத்தின்படி ஜம்மு காஷ்மீரில் 22 மாவட்டங்களும் லடாக்கில் 2 மாவட்டங்களும் உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜம்மு காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ளது. கில்ஜித்-பல்டிஸ்தான் லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கிறது.

மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் உடைக்கப்பட்டது. ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் இவை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்தன.

தற்போது வெளியாகியுள்ள புதிய வரைபடத்தின்படி இந்தியாவின் மாநிலங்களின் எண்ணிக்கை 28. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9.
அண்மையில், ஜம்மு காஷ்மீரின் முதல் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு நியமிக்கப்பட்டார். லடாக்கின் முதல் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூா் நியமிக்கப்பட்டார். இருவரும் சில நாட்களுக்கு முன் பதவியேற்றுள்ளனர்.

சீனா சொந்தம் கொண்டாடும் அக்சாய் சின் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை புதிய வரைபடத்தில் சேர்த்து அவை இந்தியாவுக்கு சொந்தம் என்று காட்டப்பட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசமாக அறிவித்தபோதே சீனா அதனைக் கண்டித்தது.

இது தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா வெளியிட்டுள்ள வரைபடத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகளின் வரைபடங்களுக்கு முரணான வகையில் வெளியாகி உள்ள இந்த வரைபடத்தை பாகிஸ்தான் நிராகரிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.
New Map showing the Union Territories of & and , as these exist after 31st October, 2019.
View image on Twitter

No comments:

Post a Comment