பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்தார். 

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இதன்போது பாதுகாப்பு ஆலோசகர் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment