அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் அதேநேரம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் கலந்துகொண்டிருந்தார்.
அரசாங்க சேவையாளர் என்ற ரீதியில் அவர் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட முடியாத நிலையில் அவர் இவ்வாறு செயற்பட்டமை, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவரது ‘இரண்டு பிழைகள் ஒரு சரியாகாது’ என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
டொக்டர்களின் பலமான தொழிற் சங்கத்தின் தலைவரான டொக்டர் அனுருத்த பாதெனிய அவரது சர்ச்சைக்குரிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரின் கூட்டத்தில் கலந்துகொண்ட தவறைச் சரி செய்யவே அவர் புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டத்தில் இரண்டாவது முறையாக கலந்துகொண்டிருக்கிறார்.
இது அவரது குற்றத்தை இரட்டிப்பு ஆக்குமே தவிர இரண்டு விளைவுகளையும் சரி செய்வதாக அமையாது என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
டொக்டர் அனுருத்த பாதெனிய மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தேர்தல் ஆணையாளரிடம் கேட்டபோது, டொக்டர் பாதெனிய மீது விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் அவர்களுக்கான கட்டுப்பாட்டு வரம்பெல்லை தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அரசாங்க அதிகாரிகள் தமது வேலை நேரங்களில் அல்லது லீவு போட்டு விட்டு அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவருக்காக எந்தவொரு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.
No comments:
Post a Comment