(எச்.எம்.எம்.பர்ஸான்)
பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவும் ஓட்டமாவடிக்கு வருகை தரவுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து நடைபெறவுள்ள பிரமாண்டமான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6.30 மணிக்கு ஓட்டமாவடி, செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை (கப்பல் ஹாஜியார் மில்) வளாகத்திற்கு ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ளார்.
அத்தோடு இம்மாதம் 9ஆம் திகதி ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் சஜித் பிரமதாசாவின் வருகை கிழக்கு மாகாணத்தின் முதலாவது விஜயம் இதுவாகும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்நிகழ்வில் பெருந்தொகையான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், அமைப்புக்களின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது ஒற்றுமையையும், பலத்தையும் காண்பிக்க அவசியம் வருகை தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
No comments:
Post a Comment